News March 28, 2025
மதுரை எம்.பி சு.வெ தந்தை இறப்புக்கு முதல்வர் இரங்கல் செய்தி

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தை இறப்புக்கு முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையாரான இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

கனரக, இலகுரக வாகனங்கள் இன்று முதல் பகலில் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனத்துக்கும் அனுமதி இல்லை. பொதுமக்களின் வாகனங்கள் அக்.18,19ல் நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, தெற்குமாசிவீதி, கீழமாசிவீதி, மேலாவணி மூல வீதி, கீழாவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதிகளில் டூவீலர் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 17, 2025
மதுரை அருகே மழையால் விபத்து- பறிபோன உயிர்

மதுரை அச்சம்பத்து வ.உ.சி.,தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகமுத்து (22). இவர் டூவீலர் கன்சல்டிங் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வாடிப்பட்டிக்கு விற்பனைக்கான டூவீலரில் சென்று திரும்பினார். சமயநல்லுார் அருகே கட்டப்புளி நகர் நான்கு வழிச்சாலையில் மழையால் நிலை தடுமாறிய டூவீலர் சென்டர் மோதி விழுந்ததில் இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
மதுரை மக்களே உள்ளூரிலே வேலை ரெடி

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (அக்.17) காலை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் கல்வித்தகுதிக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்கின்றன. ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழஙக்ப்படும். 10th, டிகிரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தோர் பங்கேற்கலாம்.<