News May 15, 2024
மதுரை: அழகர்கோவில் மலைப்பாதை மூடல்

மதுரை, அழகர்கோவில் மலைப்பாதை இன்று மூடப்பட்டது. அழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று ஒரு நாள் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. முன்னறிவிப்பு இன்றி, அழகர்கோவில் மலை சாலை மூடப்பட்டதால், மலை மீது உள்ள பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் போன்றவற்றிற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
Similar News
News November 15, 2025
மதுரை: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

மதுரை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
மதுரையில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்.!

அனுப்பானடியை சேர்ந்த தர்மராஜ் மகள் திவ்யா(28). இவர் மலேசியாவில் தங்கி படித்து வருவதாக நம்பி அவர் தந்தை மாதந்தோறும் பணம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் திவ்யா மதுரை மருத்துவமனையில் இறந்து போனதாக இவருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் திவ்யா, பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மதுரையில் வசித்ததும், கணவனுடன் தகராறில் தூக்கிட்டதும் தெரிந்தது. ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News November 15, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை மாவட்டத்தில் அண்ணா பேருந்து நிலையம், ஒத்தக்கடை, வண்டியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.15) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


