News April 12, 2025
மதுரை அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

செக்கானுாரணி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 24, லாரி டிரைவர். இவர் நேற்று திண்டுக்கல் மதுரை 4 வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார்.குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்தது.லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர்களுக்கு SHARE செய்து தினமும் லாரி எடுக்கும் முன் டயரை செக் பண்ண சொல்லுங்க.
Similar News
News April 30, 2025
திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

அவனியாபுரம் அயன்பாப்பாகுடியை சேர்ந்தவர் அழகர் மகன் முனியசாமி(35). திருமணம் ஆகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. திருமணம் ஆகாததை நினைத்து அடிக்கடி புலம்பி கொண்டிருந்துள்ளார். இதனால் 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில், மாடு கட்டும் கயிற்றால் தூக்குபோட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
News April 29, 2025
மதுரை பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

மதுரை மக்களே அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
▶️திருமங்கலம் -04549-280361
▶️தி.குன்றம்-04182-220620
▶️உசிலம்பட்டி -04552-253510
▶️ மேலூர் -0452-2487725
▶️ சமயநல்லூர் -0452-24635360
▶️மதுரை நகர் -0452-2330031
▶️திலகர் திடல் -452-2533247
▶️தல்லாக்குளம்-0452 – 2538015
இந்த எண்களை தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.