News April 6, 2025

மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

image

நாகரீகம் வளர்ந்து வரும் நவீன காலத்தில்மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 
சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர் கிராமத்தினர்.

Similar News

News October 19, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News October 19, 2025

மதுரை மக்களே அபாய எச்சரிக்கை

image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News October 19, 2025

உச்சத்தை தொட்ட மதுரை மல்லி

image

மதுரை மல்லிகை நேற்று காலையில் கிலோ ரூ.2500 ல் தொடங்கி மதியம் ரூ.2000 ஆக குறைந்தது. பிச்சி, கனகாம்பரம் கிலோ ரூ.1500, முல்லை 1400, அரளி 300, செவ்வந்தி, சம்பங்கி 150, செண்டுமல்லி 80, ரோஸ் 200, பட்டன் ரோஸ் 250, பன்னீர் ரோஸ் 300, கோழிக்கொண்டை 100, மரிக்கொழுந்து கிலோ ரூ.50, தாமரை ஒன்று ரூ.25க்கு விற்கப்பட்டது. மழையால் பூக்கள் வரத்து குறைந்ததும் விலை கூடுதலுக்கு ஒரு காரணம் என வியாபரிகள் தெரிவிகின்றனர்.

error: Content is protected !!