News June 26, 2024
மதுரை அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

மதுரை மீனாட்சி மகளிர் அரசு கல்லூரியில் நிகழ் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று வணிகவியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 1,230 இடங்களுக்கு 12,853 மாணவிகள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
BREAKING: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு மற்றும் கோயில் குடமுழுக்கிற்கு முன்பாக புதுமண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடுமா என மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிச.மாதம் அமைச்சர் குடமுழுக்கு குறித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
மதுரை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<
News September 18, 2025
மதுரையில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்

மதுரையில் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. அதில் கலெக்டர் பேசுகையில், ”1200க்கு மேல் வாக்காளர் உள்ள 300க்கும் மேலான ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் தேவையானதாக திருமங்கலம் தொகுதியில் 6, திருப்பரங்குன்றத்தில் 3, மதுரை கிழக்கில் 3, உசிலம்பட்டியில் 4 உட்பட மொத்தம் 19 புதிதாகவே ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன”என்றார்.