News September 14, 2024
மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.
Similar News
News January 8, 2026
மதுரை: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் டீ மாஸ்டர் பாபு (57). இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் வீட்டில் இருந்து 2 நாட்களாக வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அழுகிய நிலையில் பாபு இறந்து கிடந்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 8, 2026
மதுரை: மூச்சுத் திணறி இளம் பெண் பலியான சோகம்..

மதுரை சிம்மக்கலை சேர்ந்த பாலாஜி மனைவி பவித்ராவிற்கு (28), கடந்த 2 வருடமாக மூச்சு விடுதல் பிரச்சனை இருந்தது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று (ஜன.7) மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 8, 2026
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஜன. 17-ல் முதல்வர் தொடங்குகிறார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் 15, 16, 17 தேதிகளில் நடைபெறும். பாலமேடு போட்டியை 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு கார் பரிசுக்கு பதிலாக டிராக்டர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


