News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News November 4, 2025
மதுரை ரயில்வே ஊழியர் ஆற்றில் விழுந்து பலி

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் வயது 38, ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நாகர்கோவில் சென்று விட்டு நேற்று முன்தினம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் போது, விருதுநகரில் உள்ள கவுசிகமா நதியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
மதுரை: கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

கோவையில் தனியார் கல்லூரியில் முதுகலை படிக்கும் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி படித்து வந்தார். காதலனுடன் காரில் இருந்தபோது அவ்வழியாக வந்த மூவர் காதலனை அரிவாளால் காயப்படுத்தி, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை சுட்டுபிடித்தனர்.
News November 4, 2025
மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் மகள் பாண்டீஸ்வரி 20. இவர் நிலக்கோட்டை அரசு கலை கல்லூரியில் சிஎஸ்ஐ 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


