News October 23, 2024

மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்

image

27.10.2024 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டும் அக்.29 & 30 ஆகிய நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.2014 (மாலை 07.00 மணி வரை மட்டும்) மற்றும் 29.10.2024, 30.10.2024 மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.

Similar News

News December 4, 2025

மதுரை: மயங்கி கிடந்தவரை மீட்டவர் விபத்தில் பரிதாப பலி

image

புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த லோகேஸ்வரன் 28. மெடிக்கல் கம்பெனி விற்பனை பிரதிநிதி. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் நத்தம் நெடுஞ்சாலை கடவூர் அழகர்கோவில் மலை ரோட்டில் காரில் சென்ற போது, சாலை ஓரத்தில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். பின்னர் சாலையைக் கடந்த போது திடீர்னு வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 4, 2025

மதுரையில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மதுரையில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News December 4, 2025

அலங்காநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

image

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்த விஜய் பிரபாகரன் 26. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!