News March 24, 2025

மதுரையில் 3நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டியின் அருகில் செல்லும் மெயின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி தரப்பினர் மேற்கொள்ள இருப்பதாலும் , புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் ( மார்ச் 26,27,28) மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு

Similar News

News December 5, 2025

JUSTIN திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு

image

திருப்பரங்குன்றம் விசாரணையை வரும் 10-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு 12-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் வெள்ளிக்கிழமைக்கு பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்று இருநீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

News December 5, 2025

நாடளுமன்றத்தில் எதிரொளிக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம்

image

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

News December 5, 2025

மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!