News March 27, 2025
மதுரையில் 22 உயிரை காவு வாங்கிய இரண்டு குடும்பத்து பகை

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 4, 2025
JUST IN திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கு விசாரணை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில், உயர் நீதிமன்ற அமர்வில் அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கை விசாரித்து வருகிறார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை என்றும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 4, 2025
BIG BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு.!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கேராமச்சந்திரன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என தெரிவித்துள்ளனர்.
News December 4, 2025
மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.


