News April 4, 2025

மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News December 17, 2025

மதுரை: மதுவால் இளைஞர் தற்கொலை

image

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமெச்சிக்குளம் காந்தி கிரவுண்ட் தெருவில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (25). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அருண்பாண்டி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2025

மதுரை: போலீஸ் கடும் எச்சரிக்கை

image

ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 3 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும், சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 16, 2025

JUSTIN: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசாரணைக்கு தடையில்லை

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும், வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!