News March 26, 2025
மதுரையில் ரயில் சேவை நீடிப்பு

ஹைதராபாத் அருகில் உள்ள காச்சிகுடா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கும் சென்று வரும் என தெற்கு இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News December 5, 2025
மதுரையில் பரவும் வைரஸ் காய்ச்சல்… மக்களே உஷார்

மதுரை அரசு மருத்துவமனையில் 28 குழந்தைகள், 33 பெரியவர்கள் என மொத்தம் 61 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 64 வயது ஆண், 30 வயது பெண் என இருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இத்துடன் மதுரை புதூர் 13 வயது சிறுமி முதல் நிலை (ஹெச்1 என்1) பன்றி காய்ச்சல் பாதிப்பு, இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News December 5, 2025
மதுரை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 5, 2025
மதுரை: அரசு பஸ் மோதி துடிதுடித்து வாலிபர் பலி.!

தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற 35வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோத, தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தும்பைப்பட்டி விஏஓ சரவணன் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார். திருச்சி துறையூரை சேர்ந்த பஸ் டிரைவர் சுதாகரை கைது செய்த மேலூர் போலீசார் இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


