News November 22, 2024

மதுரையில் முழுநேர கடையடைப்பு அறிவிப்பு

image

சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை கண்டித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரையில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 29ஆம் தேதி முழுநேர கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கம் அறிவித்துள்ளது. எனவே கடையடைப்பு போராட்டத்தில் சிறு வணிகர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

மதுரையி மாநகராட்சி ஊழியர் கால்வாயில் விழுந்து பலி.!

image

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாயில் நேற்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததனர். இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

மதுரை: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

மதுரை மாவட்ட தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை சார்பில், மல்லிகை & முருங்கை ஏற்றுமதி தர நிலைகள் குறித்த இலவச பயிற்சி வழங்கபடுகிறது. விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு டிச.8 முதல் டிச.24 வரை 15 நாட்கள் திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் நடைபெறுகிறது. 18 வயது நிரம்பிய 8ம் வகுப்பு தேர்ச்சி பெறறோர் இதில் சேரலாம். கலந்துக்கொள்ள விரும்புவோர் தோட்டக்கலை அலுவலரை அணுகவும். SHARE

News December 2, 2025

மதுரை: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!