News August 4, 2024

மதுரையில் மாமதுரை பாடல் வெளியீடு

image

மதுரையில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8,9,10,11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்களுக்கு விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள்,பாரம்பரிய நடைபயணம்,உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கம் வளர்த்த மாமதுரை என்ற பாடலை மதுரை எம்பி சு.வெங்கடேசன் தலைமையில்
வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News October 23, 2025

மதுரையில் சோகம்..மது என மருந்து குடித்தவர் பலி

image

மதுரை மாவட்டம் பாலமேடு முடுவார்பட்டி கண்ணன் 57. பந்தல் அமைக்கும் தொழிலாளி. அக்.,18 இரவு போதையில் வீட்டில் மது பாட்டில் என நினைத்து ஆயுர்வேத மருந்தை குடித்து வாந்தி எடுத்து மயங்கினார்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 23, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் இன்று காலை 9:00 – மாலை 5:00 மணி வரை இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, ராஜிவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர், தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News October 22, 2025

அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் பலி

image

மதுரை ஆத்­தி­கு­ளத்தை சேர்ந்­த­வர் மகா­வா­ணன் (61). இவ­ரு­டைய மனைவி சில மாதங்­களுக்கு முன்பு இறந்­து­ போக, அதனால் மதுவிற்கு அடிமையானார். இதில் உடல் பாதிக்கப்பட, டாக்­டர்­ மது குடிக்­க­ கூ­டாது என்று அறி­வு­றுத்தினர். அதை கேட்­காமல் அள­வுக்கு அதி­க­மாக குடிக்க, உடல்­ நிலை பாதிக்­கப்பட்டு மருத்­து­வ­ம­னை­ கொண்டு செல்லப்பட்டவர் இன்று உயிரிழந்­தார். தல்­லா­கு­ளம் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

error: Content is protected !!