News April 22, 2025
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி பட்டறை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 26.04.2025 அன்று ஓவிய பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், 26.04.2025-அன்று நடைபெறவுள்ள ஓவிய பயிற்சி பட்டறை குறித்து கூடுதல் விவரங்களை கலை பண்பாட்டு துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News July 7, 2025
மீனாட்சி அம்மன் கோவில் ஆனி பொன்னூஞ்சல் உற்சவ விழா

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சியை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆணி பொன்னூஞ்சல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பிரியாவிடையுடன் எழுந்தருளி கோவிலில் வலம் வந்து பொன்னூஞ்சல் உற்சவத்தில் ஊஞ்சலாடினர். ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்தினருடன் வருகை புரிந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
News July 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை – எஸ்.பி உத்தரவு

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றுக்காக அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது, காவலர்களால் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாவட்ட காவல்துறை எஸ்.பி உத்தரவின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.