News January 3, 2025
மதுரையில் திமுக சார்பாக கபடி போட்டி அறிவிப்பு

மதுரை மாவட்டத்தின் வடக்கு திமுக சார்பாக தென்னிந்திய அளவிலான ஏ லெவல் கபடி போட்டி நடைபெற இருப்பதாக அறிவித்து வெளியிட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 7, 8, 9 தேதிகளில் வண்டியூர் பகுதியில் இருக்கக்கூடிய திடலில் நடைபெறுவதாகவும் முதல் பரிசு 2 லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசு 1,50,000 ரூபாயும் மூன்றாம் பரிசு 1லட்ச ரூபாயும், நான்காம் பரிசு 50 ஆயிரம் ரூபாயும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
மதுரை: டிராக்டர் மோதி டூவீலரில் சென்றவர் பலி.!

திருமங்கலத்தைச் சேர்ந்த தவமணி (59), என்பவர் டூவீலரில் மங்கல்ரேவு அத்திப்பட்டி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜம்பலாபுரம் அருகே பேரையூரைச் சேர்ந்த இளையராஜா (34) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. படுகாயத்துடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி இன்று உயிரிழந்தார். டிராக்டர் டிரைவரை கைது செய்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
மதுரை: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

மதுரை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
மதுரையில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்.!

அனுப்பானடியை சேர்ந்த தர்மராஜ் மகள் திவ்யா(28). இவர் மலேசியாவில் தங்கி படித்து வருவதாக நம்பி அவர் தந்தை மாதந்தோறும் பணம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் திவ்யா மதுரை மருத்துவமனையில் இறந்து போனதாக இவருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் திவ்யா, பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மதுரையில் வசித்ததும், கணவனுடன் தகராறில் தூக்கிட்டதும் தெரிந்தது. ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


