News April 7, 2025

மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

image

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News October 15, 2025

மதுரை: தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

image

மதுரை வேல்முருகன் நகரில் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்கும் விவகாரத்தில் தி.மு.க மாநகராட்சி கவுன்சிலர் அமுதாவின் கணவரும், பகுதி செயலாளருமான தவமணி மீது, குடியிருப்பு சங்க நிர்வாகிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்வன்முறை தடுப்புச்சட்டம் உட்பட 5பிரிவுகளின்கீழ் SSகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மே லும் சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் பதவியில் இருந்தும் தவமணி நீக்கப்பட்டுள்ளார்.

News October 15, 2025

மதுரை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

அழகர்கோவில் உண்டியல் திறப்பு

image

மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் கோயிலில் மாதாந்திர உண்டியல் என்னும் பணிக்காக துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.48 லட்சத்து 98 ஆயிரத்து 950 ரொக்கம், 25.5 கிராம் தங்கம், 200.64 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன. என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

error: Content is protected !!