News April 5, 2025
மதுரையில் டெங்கு பாதிப்பு குறைந்தது- சுகாதாரத்துறை அதிகாரிகள்

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 19, 2025
மதுரை: நாய் குறுக்கிட்டு விபத்து; கணவன், மனைவி பலி

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த கணவன் மனைவி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். காமாட்சி அம்மன் நகர் அருகே சென்ற போது, குறுக்கே நாய் ஒன்று வர, அதன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டு இறந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 19, 2025
மதுரையில் மெட்ரோ திட்டம் நிறுத்தம் – மெட்ரோ விளக்கம்.!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது, “மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை. திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ சார்பில் பதில் அளிக்கப்படும். மேலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளது.
News November 19, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (18.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


