News March 26, 2025
மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*
Similar News
News October 20, 2025
ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மேலுாரில் தீபாவளியை முன்னிட்டு நேற்று சிறப்பு சந்தை நடந்தது. மேலுார் தாலுகாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று நடந்த சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
News October 20, 2025
மதுரை மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

மதுரை மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம்,தொலைபேசி எண்கள்:
தல்லாக்குளம: 0452-531620, மதுரை: 0452-2335399, மேலூர்: 0452-2415582, திருமங்கலம்: 04549-280626, மீனாட்சியம்மன் கோயில்: 04522-350112, இங்கு <
News October 19, 2025
மதுரை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கிவரும் நிலையில், அசைவ உணவு சமைப்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் மாலை முதலே குவிந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி வருகின்றனர்.