News March 25, 2024

மதுரையில் கனிமொழி பிரச்சாரம்

image

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன்படி, ஏப்ரல்.4ஆம் தேதி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Similar News

News December 12, 2025

மதுரையில் டூவீலர் மோதி ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி

image

ஆந்திர மாநி­லத்தை சேர்ந்­த­ கவினி வெங்­கட்­ராவ்(48 ) சக பக்­தர்­க­ளு­டன் ஆந்தி­ரா­வில் இருந்து ஐயப்­பன் கோவி­லுக்கு தனியார் பேருந்தில் சென்­றார். பின் இன்று மதுரை வந்த அவர்கள் சிலைமானில் பஸ்சை நிறுத்திய போது, அவர் சாலையை கடந்த போது சிவ­கங்கை புவனேஸ்­வ­ரன்(30) ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் கவினி வெங்­கட்­ராவ் உயிரிழந்­தார். சிலைமான் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News December 12, 2025

மதுரை: ஆற்றில் முதலை அச்சத்தில் மக்கள்

image

நரிக்குடி மக்களுக்கு டிச. 5ல் வைகை அணையில் இருந்து, 8 நாட்களுக்கு கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிக அளவு தண்ணீர் வரத்தால் கரை புரண்டு ஓடியது. இதனால் மானூர், மறையூர், வீரசோழன், பள்ளப்பட்டி பகுதிகளில் மீன் பிடிக்க ஏராளமானவர்கள் தூண்டில் போட்டு வருகின்றனர். அப்பாது உலக்குடி அருகே தண்ணீரில் முதலை தெரிந்தது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News December 11, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!