News August 14, 2024
மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News November 16, 2025
மதுரை: எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

மதுரை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 16, 2025
மதுரையில் வாலிபருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு

மதுரை பேரையூர் அருகே மங்கள்ரேவு தெற்கு தெருவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று மயானத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உறவினர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது, துக்க வீட்டைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து அதை ஊரைச் சேர்ந்த தங்கமுத்து 35 என்பவரை அரிவானால் வெட்டினர், கையில் வெட்டு காயம்பட்ட அவர் பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
News November 16, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ

விளாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) மதுரை கொசவபட்டியில் உள்ள குலதெய்வம் கோயிலில், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதை அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் பத்மா இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தில் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


