News September 28, 2024
மதுரையில் கனமழை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.
Similar News
News December 17, 2025
மதுரை: கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் முன்னிட்டு தெற்கு ரயில்வே, நெல்லையிலிருந்து (06166) ரயில் டிசம்பர் 28, ஜனவரி 4 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சேரும். தாம்பரம்–திருநெல்வேலி (06165) ரயில் டிசம்பர் 29, ஜனவரி 5 அன்று மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சேரும். மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
News December 17, 2025
5 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை – கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆய்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் நேற்று (16.12.2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – மதுரை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக் கழக மண்டல வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News December 17, 2025
மதுரை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மதுரை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க


