News November 23, 2024
மதுரையில் கட்டுமான பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்

மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேலமடை சந்திப்பு நோக்கி வராமல் மாட்டுத்தாவணி அல்லது விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் நகருக்குள் செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வரும் 24.11.2024 அன்று சோதனை முறையிலும், 26.11.2024 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
Similar News
News December 7, 2025
மதுரை மக்களே பிரச்சனையா.?.. இந்த நம்பரை அழையுங்க..!

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம். இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
News December 7, 2025
மதுரை: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ்(32). இவர் தர்ஷிகா(27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் வசித்து வந்தார். தர்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு ஹரிஷ் பெற்றோர் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஊமச்சிகுளம் போலீசார் தர்ஷிகா புகாரின் அடிப்படையில் ஹரிஷ், அவரது தந்தை சுப்பிரமணி (63), தாயார் மாரியசெல்வம்(60), புனிதா(35) என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.