News April 21, 2025

மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

மதுரையில் ஏப்.29 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து , மே.8 திருக்கல்யாணம், மே.9 தேரோட்டம், மே.10 கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே.12 இல் நடைபெற உள்ளதால் அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.உங்க ஊர் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News September 15, 2025

கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

image

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

மதுரை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

மதுரை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<> இங்கு க்ளிக் செய்து<<>> அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

மதுரை மாநகராட்சியில் அடுத்த ‘பூதம்’ மேலும் ஒரு முறைகேடா?

image

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புயல் அடங்குவதற்குள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்காக பள்ளங்கள் தோண்டி குழாய்ப் பதிக்கும் பணிகளில் மீட்டர் அளவை குறைத்து காண்பித்து மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய வகையில், ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்தும் வரதராஜ் நிர்வாகம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!