News April 24, 2025
மதுரையில் உச்சகட்ட பாதுகாப்பு

ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதைதொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவில், மேலும் 102 பள்ளிவாசல், தர்காக்களில் 368 போலீசாரும், 21 கோயில்களில் 174 போலீசாரும், திருப்பரங்குன்றம் மலையில் 41 போலீசாரும், 8 சர்ச்களில் 18 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 24, 2025
மதுரையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு

மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளுக்காக பந்தல்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டை நிறுத்தி சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதனால் பந்தல்குடி கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேம்பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளது.
News April 24, 2025
மதுரை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️மதுரை வடக்கு வட்டாட்சியர்-0452-2532858
▶️மதுரை மேற்கு-0452-2605300
▶️மதுரை தெற்கு-0452-2531645
▶️மதுரை கிழக்கு-0452-2422025
▶️திருப்பரங்குன்றம்-0452-2482311
▶️வாடிப்பட்டி-04543-254241
▶️மேலூர்-0452-2415222
▶️கள்ளிக்குடி-04549-278889
▶️உசிலம்பட்டி-04552-252189
▶️திருமங்கலம்-04549-280759
▶️பேரையூர்-04549-275677
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 23, 2025
அரிசி கேழ்வரகு மாவிற்கு இனி ‘அக்மார்க்’ முத்திரை

மதுரை : அரிசி மாவு, கேழ்வரகு மாவிற்கான ‘அக்மார்க்’ அங்கீகாரத்தை மத்திய அரசு முதன்முறையாக வழங்கியுள்ள நிலையில், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் மாவு வகைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற கூடுதல் விவரங்களுக்கு 96292 88369 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.