News November 23, 2024
மதுரையில் இன்னும் சற்று நேரத்தில்

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 11, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (10.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
வாடிப்பட்டி அருகே மகள், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டி சேர்ந்த சரவணபாண்டி 42. இவரது மகள் பாண்டி செல்வி கல்லூரியில் படித்து வந்த நிலையில் தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இழப்பை தாங்க முடியாமல் பாண்டிச் செல்வியின் தந்தை சரவண பாண்டி மனம் வெறுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 10, 2025
மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.


