News April 16, 2025
மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவனர் கடத்தல்

மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வரும் சுந்தர் என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தல்லாகுளம் பகுதியில் சிலர் கடத்தி சென்றதாக வந்த புகாரில் சுந்தரை மீட்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில் 5 பேரை பிடித்து விசாரணை. மேலும் 5 நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். பணத்திற்காக கடத்தப்பட்டாரா? வேறு எதுவும் காரணமா என தீவிர விசாரணை.
Similar News
News December 6, 2025
மதுரை: குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூரம்

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் கண்ணன் 22, கேரளாவை சேர்ந்த கலாசூர்யா 26, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கண்ணன் கலாசூர்யாவுக்கு மூன்றாவது கணவர். இரண்டாவது கணவருக்கு பிறந்த கலாசூர்யாவின் 2 வயது குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறிய கண்ணன் கடந்த மாதம் 5-ந் தேதி குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, கலாசூர்யாவுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் புதரில் வீசியுள்ளார். செக்கானூரணி போலீசார் விசாரணை.
News December 6, 2025
மதுரை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா..!

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக், கார், லாரி உள்ளிட்ட 72 வாகனங்களில், 48 வாகனங்கள் 22.12.2025 ஆம் தேதி மதுரையில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 9585511010 எண்ணில் அழைக்கவும். கம்மி விலையில் வாகனங்கள் கிடைக்கும். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
மதுரை இளைஞர் ஏடிஎம்மில் நூதன திருட்டு

திருப்புவனத்தை சேர்ந்த மஞ்சுளா (53) மாட்டுத்தாவணியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற போது அவருக்கு உதவி செய்வது போல் வாலிபர் ஒருவர் நடித்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரின் செல்போனில் ரூ 28,500 பணம் எடுத்ததாக மெசேஜ் வந்தது. மாட்டுத்தாவணி போலீசார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்து வில்லாபுரம் சபரி கிருஷ்ணனை(33) நேற்று கைது செய்து ரூ.8000த்தை பறிமுதல் செய்தனர்.


