News August 25, 2024

மதுரையில் அமையும் முதல் சரணாலயம்?

image

மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடிகிறது. மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

மதுரை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளைக்குள் செப். 19 சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News September 18, 2025

மதுரையில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்

image

மதுரையில் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. அதில் கலெக்டர் பேசுகையில், ”1200க்கு மேல் வாக்காளர் உள்ள 300க்கும் மேலான ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் தேவையானதாக திருமங்கலம் தொகுதியில் 6, திருப்பரங்குன்றத்தில் 3, மதுரை கிழக்கில் 3, உசிலம்பட்டியில் 4 உட்பட மொத்தம் 19 புதிதாகவே ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன”என்றார்.

News September 18, 2025

மதுரையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நாளை செப்.19 காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!