News April 7, 2025
மதுரையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் மதுரை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நண்பர்களுக்கு குடையை எடுத்துட்டு வெளிய போக சொல்ல மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News December 19, 2025
மதுரை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <
News December 19, 2025
மதுரை: திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரையை சேர்ந்த செல்வம் மகள் ஆர்த்தி(21)க்கும் மேலவளவு தென்னரசுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 3 பவுன் நகை போடப்பட்ட நிலையில் மேலும் 5 பவுன் நகை வாங்கி வர சொல்லி கணவர் இவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் ஆர்த்தி நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தாயார் அனிதா புகாரில் மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News December 19, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் இன்று காலை 9 முதல் மாலை 5:00 மணி வரை உசிலம்பட்டி, மறவர் பட்டி, வலையபட்டி, கரடிக்கல், சின்ன பாலமேடு, மாலைப்பட்டி, பாலமேடு,அலங்காநல்லுார், நேஷனல் சுகர் மில், பி.மேட்டுப்பட்டி, அழகாபுரி, சிறு வாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன் குளம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், உசிலம்பட்டி, முடுவார் பட்டி, குறவன் குளம்,கோவில்பட்டி மற்றும் இதன் சுற்றுபகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.SHARE IT


