News April 9, 2025
மதுரையில் அஜித் படம் வெளியாவதில் புது சிக்கல்

நடிகர் அஜித் நடிப்பில் நாளை நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 500 முதல் 250 வசூல் செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
Similar News
News December 18, 2025
மதுரை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

மதுரை மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 18, 2025
மதுரையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள வேலை வாய்ப்பு தொழிலாளி வழிகாட்டு மையத்திற்கு நேரில் சென்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, இராம கவுண்டன்பட்டி, தெத்துார், கரடிக்கல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, உசிலம்பட்டி, முடுவார் பட்டி, குறவன் குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு. அலங்காநல்லுார், நேஷனல் சுகர் மில், வைகாசிப்பட்டியில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.


