News March 31, 2024
மதுபான விடுதி உரிமையாளர் ஜாமினில் விடுதலை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் விடுதி உரிமையாளர் அசோக் குமார் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்
Similar News
News April 20, 2025
சென்னை மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 9444131000, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008132, ▶சிறப்பு துணை கலெக்டர் – 044-25268321, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) – 044-25268322, ▶உணவு பாதுகாப்பு அலுவலர் – 9442225555, ▶மாவட்ட மேலாளர் (தாட்கோ) – 9445029456, ▶மாவட்ட பின்தங்கிய வகுப்பு நல அலுவலர் – 9445477825, ▶மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் – 7338801253, ▶மாவட்ட வருவாய் அலுவலர் (தபால்) 9842411775.
News April 20, 2025
GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை GST சாலையில், 4 வழிச்சாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அவ்வழியில் இன்று (ஏப்.20) முதல் 3 நாட்களுக்கு (ஏப்.22) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் வாகனங்கள் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக சேமியர்ஸ் சாலையின் வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்கு சென்று அண்ணா சாலை செல்லலாம்.
News April 20, 2025
பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில்

‘அறுபடை வீடு’ சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோயிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனை வழிபட்ட பலனை பெற முடியும். ஷேர் பண்ணுங்க