News August 14, 2024
மதுபான கடைகள் இயங்க தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், கிளப்கள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ஆம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
தஞ்சை: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
News October 18, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட 1 பகுதிக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஷேமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்களுக்கு விவசாயிகள் (நவ.15) தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
தஞ்சை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள நாராயணசாமி சிலை அருகே கடந்த 16-ந்தேதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் யார் இவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.