News April 9, 2025
மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
அரியலூர்: மகன் மற்றும் தாய்க்கு சிறை தண்டனை

அரியலூர் அழகப்பா நகரைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தாய் கண்ணகி ஆகியோர் தங்களது வீட்டை விற்பதாக கோரி ஆசிரியர் ஜெயாவிற்கு 43.30 இலட்சம் பெற்றுக் கொண்டு, கிரையம் எழுதி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து ஜெயா அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் செந்தில்குமார் கண்ணகி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.