News May 7, 2025
மதுக்கடைகளை மூட உத்தரவு: மீறினால் நடவடிக்கை

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இன்று (மே 1) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகள் மற்றும் அந்த கடைகளில் செயல்படும் மதுக்கூடங்களை நேற்று (ஏப்.30) இரவு 10 மணிக்கு பூட்ட வேண்டுமென ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. மேலும், முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்டால், வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மேலாளர்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News October 20, 2025
சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று (20.10.25) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News October 20, 2025
பட்டாசு கழிவை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது: மாநகராட்சி

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேர கட்டுப்பாடு உள்ளது. பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
News October 20, 2025
சென்னை மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

சென்னை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!