News June 27, 2024
மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News July 5, 2025
கோவை: இபிஎஸ் பிரச்சார பயண திட்டம்

இபிஎஸ் பிரச்சார பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 7 காலை 9 மணிக்கு வனபத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. மாலை 4.35 மணி அளவில் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் காந்தி சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ. பின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
News July 5, 2025
கோவையில் வேலை வாய்ப்பு!

கோவை பீளமேட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Trainee technician பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிப்ளமோ முடித்தவர்கள் <
News July 5, 2025
சூலூர்: வைத்தியநாதர் கோயில்

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை. SHARE IT!