News June 27, 2024
மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 16, 2025
கோவை அருகே குதிரை மோதி விபத்து

கோவையில் கடந்த சில நாள்களாக சாலையில் கால்நடைகள் அதிகமாக உலா வருவதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று கோவை டூ மேட்டுப்பாளையம் சாலையில் பெண் ஒருவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் வேகமாக ஓடி வந்த குதிரை, அவரது பைக் மீது மோதியது. இதில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே, அவர்களை மீட்டனர்.
News December 16, 2025
கோவை: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கோவை மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே <
News December 16, 2025
கோவை மக்களே: இனி ரொம்ப ஈசி!

கோவையில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு <


