News January 24, 2025

மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 28.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் 5.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் வைத்து நடைபெற உள்ளது” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இன்று (24.1.25) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

BREAKING தூத்துக்குடியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT

News November 28, 2025

தூத்துக்குடியில் இனி 3 வேலை இலவச உணவு

image

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 1702 தூய்மை பணியாளர்களுக்கு 26 இடங்களில் 3 வேலை இலவச உணவு வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News November 28, 2025

கள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கள அலுவலர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!