News March 12, 2025
மண்டபம் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லத் தடை

நாளை மார்ச்.14 மற்றும் நாளை மறுநாள் மார்ச்.15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழா பாதுகாப்பு கருதி மண்டபம் தென் பகுதி விசைப் படகுகளுக்கு நாளையும், மண்டபம் வட பகுதி விசைப் படகுகளுக்கு நாளை மறுநாளும் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என மண்டபம் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 30, 2025
800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் காலத்து 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மன் சன்னதியில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது. எனவே இங்குள்ள கல்வெட்டு கி.பி13 ஆம் நுாற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.*ஷேர் பண்ணுங்க
News April 30, 2025
பரமக்குடி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

பரமக்குடி அருகே போகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 29) ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.2,56,000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசை, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். மேலும், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News April 30, 2025
மே 22ல் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தில். ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல் குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹிர் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மே 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி மே 22 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தார்.