News April 5, 2025
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

கோவை கலெக்டர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோயம்புத்தூர் 2024-25-ம் ஆண்டிற்கு சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், நகர்ப்புறங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகள் மணிமேகலை விருதுபெற 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Similar News
News April 8, 2025
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அதிகப்படுத்த சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகங்களை தெரிந்துகொள்ள மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் 89259-75980. 89259-75981, 89259-75982. 90430-66114, 89258-40945 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2025
மகாவீரா் ஜெயந்தி: மதுக்கடை மூட உத்தரவு

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில்> மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
News April 8, 2025
கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.