News April 12, 2025
மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு . SHARE
News November 23, 2025
BREAKING: நெல்லை வந்தடைந்த பேரிடர் மீட்பு படையினர்

நெல்லை மாவட்டத்திற்கு அதிக கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் இன்று (நவ.23) விடுக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் அதிநவீன உபகரணங்களுடன் தற்போது நெல்லை வந்தடைந்தனர். இன்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 23, 2025
நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவு . SHARE


