News April 10, 2025
மணிமேகலை விருதுக்கான அறிவிப்பு வெளியானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024,2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அமைப்புகளில் சிறந்து விளங்கிய குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. நேற்று (ஏப்-09) வெளியிடப்பட்ட அறிவிப்பில் 15-04-25 முதல் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. 30-04-25 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கும் பச்சகுப்பம் ரெயில் நிலையத்திற்கும் இடையே இன்று (நவ.15) சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 15, 2025
கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் நெகிழ்ச்சி

(நவ.15) வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீம குளம்ஊராட்சியில் மந்தார குட்டை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லிகலந்து கொண்டு கூட்டத்திற்கு வந்த ஒரு தாயிடம் இருந்த இரண்டு குழந்தைகளை குழந்தையை தாய் அரவணைப்பது போல் போல் மாவட்ட ஆட்சியர் தன் மடியில் அமர வைத்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்பட்டது. ஆட்சியரின் செயல் அனைவரையும் கவனத்தை ஈர்த்தது.
News November 15, 2025
திருப்பத்தூர்: வாட்ஸ்அப் இருந்தால் போதும் இது ஈஸி!

திருப்பத்தூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


