News January 12, 2025
மணப்பாறை விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

மணப்பாறை அடுத்த செவலூர் செல்லும் சாலையில் கடந்த 9ஆம் தேதி அவ்வழியே சென்ற டூரிஸ்ட் வாகனம் அதே வழியில் வந்த இருவர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News December 8, 2025
திருச்சி: என்.ஐ.டி-யில் வேலை வாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கணக்கு அதிகாரி, விடுதி மேலாளர், பல்நோக்கு பணியாளர் என மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.nitt.edu/home/other/jobs/ என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 13 ஆம் தேதிக்குள், தேசிய தொழில்நுட்ப கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
திருச்சி: தொலைந்த பணப்பையை மீட்ட போலீசார்

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் அமானத்” என்ற பெயரில், ரயில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் நேற்று தவறவிட்ட பணப்பையை, ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, பயணியிடம் உரிய அடையாளங்களை கேட்டறிந்து மீண்டும் ஒப்படைத்தனர்.
News December 8, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

போதைப் பழக்கத்திற்கு இளைய தலைமுறை அடிமையாகிவரும் நிலையில், “வாழ்க்கை விலைமதிப்பற்றது போதைக்கு அதை கொடுக்கவேண்டாம்” என திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் அல்லது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது அவசர உதவி எண் 100 அழைக்க அறிவுறுத்தி உள்ளனர்.


