News March 30, 2025
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் நிலம் மீட்பு !

சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். இணை ஆணையர் பாரதி தலைமையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.
Similar News
News July 7, 2025
காணாமல் போன நகை தனது தாயார் உடையது

மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா இன்று (ஜூலை 6) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காணாமல் போனது என் அம்மாவின் நகை தான், அவர் வயதானவர். மேலும், அவரால் காவல் நிலையத்திற்கு அடிக்கடி அலைய முடியாது என்பதால் தான் நான் புகார் எழுதிக் கொடுத்தேன். காணாமல் போன நகை தனது தாயார் உடையது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News July 6, 2025
புளியால் அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

திருச்சியைச் சேர்ந்த கோபிநாத் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று தேவகோட்டை வட்டம் புளியால் அருகே சிலை மாநாடு என்ற இடத்தில் காரை ஓட்டி வரும்போது கார்நிலை தடுமாறி சாலையின் ஓரமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கோபிநாத் தாயார் உயிரிழந்தார்.
News July 6, 2025
ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 2025 மூன்றாம் வாரம் வரை மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 22 பேரூராட்சிகளில் 11 முகாம்களும் 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும் 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் நடைபெற உள்ளது.