News April 2, 2025

மக்கள் தொடர்புத்திட்ட முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

image

அகரம்சீகூர் கிராமத்தில், 09.04.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அகரம்சீகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அகரம்சீகூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

பெரம்பலூர்: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (08.12.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சவுதி அரேபியா நாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இறப்பு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3.41 லட்சத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News December 8, 2025

பெரம்பலுர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

image

பெரம்பலுர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு பெரம்பலுர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

error: Content is protected !!