News April 22, 2025
மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று(ஏப்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News December 5, 2025
கோவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 5, 2025
கோவை மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

கோவை: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News December 5, 2025
போத்தனூர்–பரௌனி ரயில் தாமதமாக இயக்கப்படும்

சேலம்–ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர்–பரௌனி விரைவு ரயில் டிசம்பர் 6, 13, 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் தாமதமாக இயங்கும். வழக்கமான 11.50 மணிக்கு பதிலாக, ரயில் 50 நிமிட தாமதத்துடன் மதியம் 12.40 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


