News March 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தம் – கலெக்டர்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 3, 2025

தேனி: டிகிரி முடித்தால் SBI வங்கியில் வேலை ரெடி.. NO EXAM

image

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 3, 2025

தேனி: மனைவி கோபித்து கொண்டதால் கணவன் தற்கொலை

image

தேனி, சீலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் (35). இவரது மனைவி முனீஸ்வரிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சதீஸ், முனீஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்தாதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சதீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரனை.

News December 3, 2025

தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.

error: Content is protected !!