News February 17, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 555 கோரிக்கை மனுக்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (பிப்.17) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 555 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 20, 2025
மறைந்த துணை மேயரின் தந்தை உடலுக்கு அமைச்சர் மரியாதை!

வேலூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சுனில்குமாரின் தந்தை மாணிக்கம் உடல் நலம் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு இன்று (நவ. 20) பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
வேலூர்: ஒரே நாளில் 17 பேர் மீது வழக்கு பதிவு!

வேலூர், ஏரியூரில் உள்ள திறந்த வெளிமைதானத்தில், நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்தி வைப்பு!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.20) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


