News March 24, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 416 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 5, 2025
பெரம்பலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு நல்ல செய்தி!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தை (04328- 291595) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News July 5, 2025
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 7ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட மாறுதல் பெறலாம்.