News March 24, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 416 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 4, 2025
பெரம்பலூர்: மேலாண்மைக் குழு ஆசிரியர்களுக்குப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தொடங்கி வைத்தார், நேர்முக உதவியாளர் ரமேஷ் முன்னிலையில், முனைவர் மாயக்கிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் ஜெயராமன், வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
News December 4, 2025
பெரம்பலூர் கலெக்டர் யார் தெரியுமா?

ந.மிருணாளினி 2001ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற இவர், ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளாா். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News December 4, 2025
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
1.வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2.இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3.கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4.பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…


