News March 25, 2025
மக்களே கட்டாயம் மிஸ் பண்ணாதீங்க

நாமக்கல் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News December 5, 2025
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற கண்டக்டருக்கு நேர்ந்த நிலைமை!

சேந்தமங்கலம் ஜங்களாபுரம் கணேசன் (65), அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் சேலத்தில் உறவினர் இறப்புக்கு சென்றபின் டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆண்டகலூர்கேட் மேம்பாலத்தில் தடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் நுகா்வோா்கள் நலன்கருதி அனைத்துத் துறையின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் பங்கேற்கும் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் டிச.11 மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நுகா்வோா்கள் கலந்துகொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
நாமக்கல்: கள்ளக்காதலன் அடித்ததால் பெண் விபரீதம்!

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி பாலமுருகன் மனைவி ஜீவா (37) மற்றும் ஜெயக்குமார் (43) ஆகியோருக்கிடையே 8 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து, சத்யா நகரில் வீடு எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதால் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியேறி பின் வந்தபோது, ஜீவா சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டார்.இந்த சம்பவம் அறிந்த நாமக்கல் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


